“பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி” அடித்து துவம்சம் செய்யும் அனிமல்

“பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி” அடித்து துவம்சம் செய்யும்  அனிமல்
  • PublishedDecember 4, 2023

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/Divyansh011105/status/1731602332587311453

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்தது. திருவிழா அல்லாத நாள்களில் வெளியாகி இவ்வளவு வசூலித்த படங்களில் இதுதான் முதன்முறை என படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. படம் 2வது நாளில் ரூ.236 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில் 3வது நாளில் (ஞாயிற்றுக் கிழமை வரை) ரூ.356 கோடி வசூலித்துள்ளது. இதனை பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி என படக்குழு வர்ணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *