தங்கலானை ஆஸ்கருக்கு அனுப்ப படக்குழு தீவிரம்.. உண்மையா?

தங்கலானை ஆஸ்கருக்கு அனுப்ப படக்குழு தீவிரம்.. உண்மையா?
  • PublishedDecember 4, 2023

தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் வேலை நடப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார்.

தங்கலான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார்.

பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இதற்கிடையே படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் திட்டத்தில் பா.இரஞ்சித் மற்றும் படக்குழுவினர் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து உண்மை நிலவரம் எதுவும் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் அதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“தங்கலான் இயக்குநர், விக்ரம், படக்குழுவினர் சொல்வதை எல்லாம் கேட்கும்போது தங்கலான் உலகத்தரத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் ஆஸ்கருக்கு அனுப்பக்கூடிய தகுதி இந்தப் படத்துக்கு இருக்கிறது. அதற்கான வேலைகள் இப்போது போய்க்கொண்டிருக்கின்றன. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இப்போது 6 படங்களின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாதத்துக்கு எனக்கு 30 கோடி ரூபாய் தேவை.

அதாவது ஒரு நாளுக்கு எனக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். ஆனால் அதை நான் என்ஜாய் செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *