கமலும் ஸ்ரீதேவியும் காதலித்தார்களா? அவரே சொன்ன செம பதில் வெளியானது…

கமலும் ஸ்ரீதேவியும் காதலித்தார்களா? அவரே சொன்ன செம பதில் வெளியானது…
  • PublishedDecember 4, 2023

கமல் ஹாசனும், ஸ்ரீதேவியும் காதலித்தார்கள் என்று வெளியான தகவல் குறித்து கமல் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பிரபலமான நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றி பிறகு ஹீரோனியாகவும் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும் ஆனால் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி கருதப்படுகிறது.

ஸ்ரீதேவியை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்.

டீச்சராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளம்பெண் ஒரு மருத்துவரால் ஏமாற்றப்பட்டு, பிறகு தான் கிண்டலடித்த சப்பாணியையே திருமணம் செய்துகொண்டு வாழ்வது என ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தை பார்த்த பலரும் மயிலுக்கு மனதை கொடுத்தனர்.

16 வயதினிலே படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தென் இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் அலை அடித்தது. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

குறிப்பாக தமிழ்நாடு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. ரஜினி, கமல் என அப்போது வளர்ந்து வந்த இரண்டு ஹீரோக்களுடனும் ஸ்ரீதேவி போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார். பிறகு ஹிந்திக்கு சென்ற அவர் அங்கும் தனது தடத்தை ஆழமாக பதித்தார். பிறகு போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் உயிரிழந்தார்.

இதற்கிடையே ஸ்ரீதேவி தமிழில் பீக்கில் இருந்தபோது கமலுடன் ஏராளமான படங்களில் நடித்தார். அப்போது அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி பரவியது.

அதுகுறித்து இருவருமே வாய் திறக்கவில்லை. இந்த சூழலில் அந்த வதந்தி குறித்து கமல் ஹாசன் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர், “எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இருந்த உறவு அண்ணன், தங்கை போன்றதுதான். ஆனால் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என சொல்ல ஆரம்பித்தார்கள். அதுகுறித்து நாங்களும் அமைதியாகத்தான் இருந்தோம். ஏனென்றால் அப்படி சொல்லும்போது எங்கள் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. எல்லாமே வியாபாரம்தான். மற்றபடி நாங்கள் அண்ணன், தங்கையாகத்தான் பழகினோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *