தானு என்ற பாடலை தெலுங்கில் பாடி இருக்கிறார்…இசையமைப்பாளர் அனிருத்

தெலுங்கில் நானி நடிப்பில் சைலேஷ் கோலனு இயக்கி உள்ள படம் ஹிட் 3. இப்படத்தில் நானியுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா நிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. மிக்கி மேயர் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தில் தானு என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பின்னணி பாடி இருக்கிறார்
இந்த பாடலை தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பாடியுள்ளார். தற்போது படக்குழு வெளியிட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.