தளபதி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிய அனிதா… நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி, பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கிண்டலாகவும் தளபதி விஜய்யை உரசி பார்ப்பது போன்றும் கமெண்ட் போட்டு தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார் அணிதா சம்பத்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்ததை குடித்ததால் சுமார் 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் களத்தில் புதிதாக குதித்துள்ள தளபதி விஜய், ஏற்கனவே திமுக அரசை சாடியபடி அறிக்கை வெளியிட்டது மட்டும் இன்றி, நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதேபோல் நடிகர் விஷால், ஜிவி பிரகாஷ், போன்றோர் நேற்றைய தினமே தங்களுடைய கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில்… நடிகர் சூர்யாவும், அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
அதில் “நாட்டுக்காக போராட போன போது, தீவிரவாதிகளை நேருக்கு நேர் தாக்கும் போது.. நெஞ்சில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்காங்க பாவம்! என பதிவிட்டுள்ளார்”. அனிதா சம்பத்தின் இந்த பதிவுக்கு தொடர்ந்து பல தங்களின் கண்டனங்களை தெரிவிக்க துவங்கினார்கள்.
சிலர், இது போன்ற ஆபத்தான நேரத்தில் உயிருக்காக போராடுபவர்களுக்கு ஆறுதல் கூற வில்லை என்றாலும் பரவாயில்லை… ஆனால் இதுபோல் கிண்டல் செய்யாமல் இருங்கள் என கூறி வருகிறார்கள்.
தளபதி ரசிகர்கள் சிலரோ… விஜய்யை குறி வைத்து தான் அனிதா சம்பம் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் என வெளுத்து வாங்கிய நிலையில் அய்யய்யோ… நான் அவரை பற்றி பேசவே இல்லை என கூறி அந்தர் பல்டி அடித்ததோடு புதிய விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
அதில் “என்னுடைய கமெண்ட்ஸ்ல விஜய் பத்தி நான் சொல்லவே இல்லை. அவரை நான் எங்கேயும் தவறாக குறிப்பிடவில்லை. விஜய்யின் அரசியல் வருகை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல் இவ்வளவு வறுமையிலும் பணத்தை கொண்டு போய் கள்ளச்சாராயம் குடிச்சு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்காங்க. அவர்களை ஊடகங்கள் தியாகி போல் காட்டுகிறது. நான் ஊடகங்களை நோக்கி தான் அந்த கேள்வியை எழுப்பினேன். இது விஜயை நோக்கி வைக்கப்பட்ட விமர்சனம் கிடையாது. உலகத்துல எத்தனையோ பேரு… 5, 10-னு சேர்த்து வச்சு, பசங்கள படிக்க வைக்கிறாங்க. அப்படிப்பட்ட அப்பாக்கள் இருக்கிற நம்ம ஊர்ல, இப்படி ஊதாரி தனமா சுத்துறவங்களை பார்க்கும்போது ஆதங்கமாய் இருக்கு. உயிரிழந்தவங்க பாவம்னு சொல்றத விட, அவங்க மனைவிகள் மற்றும் குழந்தைகள் தான் பாவம். கடவுள் அவங்களுக்கு இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர மன உறுதிய கொடுக்கணும் என்றும், தன்னுடைய பதிவை சரியாக புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.