“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் வசூல் விபரம் வெளியானது

“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் வசூல் விபரம் வெளியானது
  • PublishedNovember 3, 2025

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்திர் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த “ஆண்பாவம் பொல்லாதது” படம் கடந்த வாரம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தில் விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் 4.1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் மூன்று நாட்களில் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *