அனுபமா நடிக்கவுள்ள ஜோடி மீண்டும் இந்த காம்போ…

அனுபமா நடிக்கவுள்ள ஜோடி மீண்டும் இந்த காம்போ…
  • PublishedMarch 18, 2025

மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து, சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.

கடைசியாக சமீபத்தில், வெளியான டிராகன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அடுத்து நடிகர் ஷர்வானந்தின் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுபமாவும் ஷர்வானந்தும் இதற்கு முன்பு ‘ஷதமானம் பவதி’ என்ற படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டரானது. தற்போது மீண்டும் இந்த காம்போ இணைவதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *