“எனது அப்பா அம்மா என்னை அதுக்காக பெத்துவிடல” முருகதாஸ் ஏன் அப்படி சொன்னார்?
தமிழ் சினிமாவில் தனது படங்கள் முலம் அரசியல் கருத்துக்களை மிகவும் தைரியமாக பேசிய இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸ்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு.
இந்நிலையில் இவரது இயக்கத்தில் கடந்த 2018அம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் அதிமுக கட்சியை மறைமுகமாக சாடியது. அந்த படத்தின் ரிலீஸின் போது படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் கூறினார்.
இந்த விவகாரம் முதலில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து இறுதியாக நீதிமன்றம் வரை சென்றது.
இதில் ஏ.ஆர். முருகதாஸ்க்கும் ராஜேந்திரனுக்கும் சுமூகமான முடிவு ஏற்பட்டதால் படத்தில் ராஜேந்திரன் என்பவரது பெயரும் டைட்டில் கார்டில் இடம் பெற வேண்டும் என தெரிவித்தது. இந்த பிரச்னை இவ்வாறு முடிக்கப்பட்ட பின்னர்தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த பிரச்சினைகள் முடிவதற்கு முன்னர் இயக்குநர் முருகதாஸ் ஒரு தனியார் யூட்டுப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அந்த பேட்டியில், ” சர்கார் பட கதை விவகாரத்தில் இயக்குநர் பாக்யராஜ் சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்துவிட்டார். எனது கதையின் கருவும் ராஜேந்திரன் என்பவரின் கதையின் கருவும் ஒரே மாதிரி இருக்கின்றது. எனவே நீங்கள் ராஜேந்திரனுக்கு எதாவது செட்டில்மெண்ட் செய்து விடுங்கள் எனக் கூறுகின்றார்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த கதையும் எனது கதையும் எப்படி ஒன்றாக முடியும். இயக்குநர் பாக்க்யராஜைப் பார்த்துத்தான் சினிமாவுக்கு வந்தேன். அதற்காக அவர் எனக்கு திருட்டுப் பட்டம் கொடுத்தால் வாங்கீட்டு போக எனது அப்பா அம்மா என்னைப் பெத்துவிடல. நான் சினிமாவுக்கு அதுக்காக வரவில்லை. இங்கு பசியை அடக்கி, தூக்கத்தை அடக்கி, காமத்தை அடக்கி தவவாழ்வு வாழ்ந்து சினிமாவுக்கு வந்துள்ளேன்.
போராடி போராடி 18 ஆண்டுகளாக இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இப்போது பாக்கியராஜ் என்னைக் கூப்பிட்டு திருட்டுப் பட்டம் கொடுத்தால் அதனை தலையை ஆட்டிட்டு போவதற்கு நான் இங்கு வரவில்லை” எனக் கூறியுள்ளார்.