ராம் சரணுக்காக 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர் ரஹ்மான் எடுத்துள்ள முடிவு…
தெலுங்கு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் விரைவில் ரிலீஸாகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ரம் சரண்.
புச்சி பாபு சனா இயக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், RC 16 படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். புச்சி பாபு சனா இயக்கும் RC 16 ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ஏஆர் ரஹ்மான். கடைசியாக 2010ம் ஆண்டு வெளியான கொமரம் புலி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொமரம் புலி படத்துக்குப் பின்னர், மேலும் பல தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க ஏஆர் ரஹ்மானுக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் அவர் தமிழ், இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், தற்போது ரம் சரணின் RC 16 படத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது டோலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்துள்ளது. முக்கியமாக ராம் சரணுக்காகவே ஏஆர் ரஹ்மான் இந்த ப்ராஜக்ட்டில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், ராம் சரண் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால், ராம் சரண் – மிருணாள் தாகூர் கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் செம்மையாக ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், இந்தி, மலையாளம் என பிஸியாக வலம் வரும் ஏஆர் ரஹ்மான், இனி தெலுங்கிலும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்தப் படத்திற்குப் பின்னர் மேலும் சில படங்களில் ஏஆர் ரஹ்மான் கமிட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தமிழில் பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், அயலான், ஜெயம் ரவியின் JR 32, KH 234 போன்ற படங்களும் ஏஆர் ரஹ்மான் லைன்-அப்பில் உள்ளன.