கவுண்டமணியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய TVK தலைவர்

கவுண்டமணியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய TVK தலைவர்
  • PublishedMay 5, 2025

கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவருடைய மரணம் திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி என திரை பிரபலங்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதில் தற்போது டி வி கே தலைவரும் நடிகருமான விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இவர் கொடைக்கானலில் ஜனநாயகம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இன்று படப்பிடிப்பை முடித்த அவர் சென்னை திரும்பினார்.

அதை அடுத்து விஷயம் கேள்விப்பட்டு கவுண்டமணியின் இல்லத்திற்கு வந்த விஜய் அவரை தோளோடு அணைத்தபடி ஆறுதல் கூறினார்.

அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். மறைந்த அவருடைய மனைவியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் எனவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *