மணி- ரவீனா ரெண்டு பேரும் பாத்ரூமுக்குள்ள!! சி..சி.. அர்ச்சனா வைத்த பகீர் குற்றச்சாட்டு

மணி- ரவீனா ரெண்டு பேரும் பாத்ரூமுக்குள்ள!! சி..சி..  அர்ச்சனா வைத்த பகீர் குற்றச்சாட்டு
  • PublishedNovember 18, 2023

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு மேலே சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தற்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள்ளே பெரிய விவாதம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. ஏற்கனவே பல இடங்களில் ரவீனா மற்றும் மணி இருவரும் சேர்ந்து பழகுவதை குறித்து சக போட்டியாளர்களே பேசி இருக்கின்றனர்.

ஆனாலும் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் எப்போதும் போலத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று போரிங் பர்பாமன்ஸ் என்று விசித்ரா மற்றும் அர்ச்சனாவை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.

அதை இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே எதிர்த்து இருந்தனர். பிறகு வேறு வழி இல்லாமல் இருவரும் ஜெயிலுக்கு சென்றிருந்தனர். அங்கு கடும் கோபத்தில் இருந்து அர்ச்சனா தன்னை போரிங் கண்டஸ்டண்ட் என்று சொன்ன ரவீனா மற்றும் மணி குறித்து திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அர்ச்சனா பேசுகையில்,

நான் சரி பாவம் வெளியே பெயர் கெட்டுப் போய் விடும், ஃபியூச்சர் மோசமாகி விடக்கூடாது என்பதற்காக மணி மற்றும் ரவீனாவை தனித்தனியாக கூப்பிட்டு இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறேன்.

அப்போ எல்லாம் சரி சரி என்று சொல்லிவிட்டு நேற்று என்னைப் பற்றி சொல்லும் போது மணி சொல்கிறான் நீங்க எங்க பிரைவேசிக்குள்ள எட்டிப் பார்த்த மாதிரி இருக்கு என்று சொல்கிறான். அது எப்படி சரியா வரும்? இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற மாதிரி பார்க்கில யாராவது நடந்துக்கிட்டா கூட போலீஸ்காரங்க வந்து அடிச்சு துரத்திடுவாங்க.

இது வீடு அதுவும் 24 மணி நேரமும் எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்கிற பொது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இரண்டு பேரும் செய்யறது சரியா இருக்கா? எப்போதும் ரெண்டு பேரும் தனியா பாத்ரூமுக்குள் போய் ஹேர்கட் பண்ணிக்கிறாங்க.

ஹேர் கலரிங் பண்ணிக்கிறாங்க. எல்லாரும் ஹாலில் உட்கார்ந்தா இவங்க ரெண்டு பேரும் மட்டும் காணாமல் போயிடுறாங்க, ஒருத்தர் மேலே தொங்கிக்கிட்டு வராங்க.

இதுவெல்லாம் பாக்குறதுக்கு அசிங்கமா இருக்கு. இவங்க இதை பண்ணனும்னா வேற எங்கேயாவது போய் பண்ணட்டும். என் கண்ணு முன்னாடி பண்ணுனா எனக்கு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் ஆகுது. அதனால நான் கண்டிப்பா சொல்லத்தான் செய்வேன் என்று அர்ச்சனா கடும் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. இதற்கு அதிகமான ரசிகர்கள் அர்ச்சனா சொல்வதும் சரிதான் என்று பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் இன்னும் பல ரசிகர்கள் அர்ச்சனா எதற்காக பூமர் மாதிரி இப்படி நடந்துக்கிறாங்க? தான் செய்வது மட்டும்தான் சரி என்று ஆணவத்தில் ஆடுகிறார்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *