விஜய்க்கு டப் கொடுக்கும் அர்ஜுன் : வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!

விஜய்க்கு டப் கொடுக்கும் அர்ஜுன் : வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!
  • PublishedJune 24, 2023

ஆக்சன் கிங் அர்ஜுன்  லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பில் கடந்த மாதம் அவர் கலந்து கொண்டதாக தகவல்களும் வெளியாகின.

இந்நிலையில் அந்த படத்தின் கெட்டப்பில் அர்ஜுன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. 60 வயதை கடந்த அர்ஜுன் இப்படி ஒரு கெட்டப்பில் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

Action King Arjun

தளபதி விஜய் வாரிசு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இந்த படத்தில் சஞ்சய் தத்,  மன்சூர் அலிகான்,  கௌதம் வாசுதேவ் மேனன்,  மிஸ்கின் போன்ற மல்டி ஸ்டார் கூட்டணியில் இணைந்திருப்பவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். இந்த கூட்டணியே லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *