சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்… வணங்கான் புதிய அப்டேட்

சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்… வணங்கான் புதிய அப்டேட்
  • PublishedAugust 13, 2023

பாலா இயக்கத்தில் மேற்கொள்ள இருக்கும் படம் தான் வணங்கான் குறித்து தெறிக்கவிடும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

மேலும், சூர்யா வணங்கான் படத்தில் தயாரிப்பை மேற்கொள்வதாக கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாலா இவரிடம் கதை கூற மறுத்ததன் காரணமாகவும், மேலும் படப்பிடிப்பின் போது பாலா சூர்யாவிடம் நடந்து கொண்ட விதமும் முரண்பாட்டை ஏற்படுத்தி இப்படத்தில் இருந்து விலகினார் சூர்யா.

அதைத்தொடர்ந்து பாலா இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் அருண் விஜய் காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரம் ஏற்று நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து மிஸ்கின் இப்படத்தில் இடம்பெற போவதாகவும் அதிர்ச்சி தகவலாய் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பாலா மற்றும் மிஸ்கின் இடையே மனக்கசப்பு இருந்து வந்த நிலையில் இப்படத்தை மிஷ்கின் ஏற்று, வெற்றி பெற செய்யப் போவதாக கூறி வருகிறார். மேலும் இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்க போகிறாராம்.

இப்படத்தில் இருந்து விலகிய சூர்யா வாய்ஸ் ஓவர் கொடுக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாதம் தொடங்க உள்ளார்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல மாத கணக்காய் கிடப்பையில் போடப்பட்ட இப்படம் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *