இலங்கைக்கு சென்ற ஒரே காரணத்தால் நடிகை அசினுக்கு நடந்த மிகப் பெரிய கொடுமை…

இலங்கைக்கு சென்ற ஒரே காரணத்தால் நடிகை அசினுக்கு நடந்த மிகப் பெரிய கொடுமை…
  • PublishedDecember 19, 2023

நடிகை அசின் தற்போது சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகி இருக்கிறார். அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இன்று வரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அசின் சினிமா வாழ்க்கையில் சரியான முடிவை எடுத்து இருந்தால் இன்று த்ரிஷா மற்றும் நயன்தாராவை ஓரம் கட்டி முதலிடத்தில் இருந்திருப்பார்.

விஜய், அஜித், சூர்யா, கமலஹாசன் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் கமிட் ஆகி த்ரிஷாவை ஓரம் கட்டினார் அசின்.

கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது அந்த கல்பனா கேரக்டரில் அசினை நடிக்க வைத்தார்கள். இதன் மூலம் பாலிவுட் சென்ற அசின் தான் தமிழ் சினிமாவை ஓரம் கட்டினார் என தப்பான புரளி இன்று வரை இருக்கிறது.

ஆனால் உண்மை அதுவல்ல. பாலிவுட்டில் ஓரளவுக்கு முன்னணி நடிகையாக வந்த அசின், சல்மான் கானுடன் அடுத்தடுத்து படங்கள் பண்ணினார்.

சல்மான் கானுடன் இணைந்து அசின் ரெடி என்னும் படத்தை நடித்துக் கொண்டிருந்தார். இதன் சூட்டிங்கிற்காக பட குழு இலங்கை பயணித்தது.

அந்த சமயத்தில் இலங்கையில் நடந்த போர் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவில் இருந்து யாரும் இலங்கைக்கு போகக்கூடாது, இலங்கையில் இருந்து யாரும் இந்தியாவுக்கு வரக்கூடாது என்ற பெரிய அரசியல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ரெடி பட குழு படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது அசின் தான். அசினை இனி தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க கூடாது என சில அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

அசின் பாலிவுட் வாய்ப்புகளை நம்பி அப்போது அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் இலங்கை சென்றார். அதற்கு அடுத்து அசினுக்கு பாலிவுட்டில் தோல்விகள் தான் அதிகமாக கிடைத்தன.

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு திரும்பி விடலாம் என அசின் நினைத்தார். ஆனால் அவருக்கு இங்கே வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருந்து விட்டார்கள்.

விஜய் உடன் அவர் நடித்த காவலன் படத்திற்கும் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டது. இந்த அரசியலை புரிந்து கொண்ட அசின், சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *