அதர்வாவுடன் இணையும் எம் ராஜேஷ்.. ஹீரோயின் யாரு தெரியுமா?

அதர்வாவுடன் இணையும் எம் ராஜேஷ்.. ஹீரோயின் யாரு தெரியுமா?
  • PublishedMarch 3, 2024

நடிகர் ஜெயம் ரவி லீட் கேரக்டரில் நடித்து வரும் படம் பிரதர். இந்த படத்தை பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கி வருகிறார்.

பிரதர் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவுடன் எம் ராஜேஷ் இணையவுள்ளார். இந்த படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் படக்குழு சார்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து யானை படத்தில் நடித்திருந்த நடிகர் அதர்வா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் அவரது ரீ என்ட்ரியாக ராஜேஷ் உடனான இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி சங்கர் இணைய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட உள்ளது. காதல், திருமணம், மற்றும் சமூகத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களத்தை எம் ராஜேஷ் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியுடன் அதிதி சங்கர் நடித்து முடித்துள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ரொமாண்டிக் காதல் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது அண்ணன் அதர்வாவுடன் அதிதி இணைய உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே ராஜேஷ் இயக்கத்தில் தான் நடிப்பது குறித்து அதர்வா பெருமை தெரிவித்துள்ளார். என்டர்டெயின்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களுக்க இந்தப் படம் நிச்சயம் சிறப்பாக அமையும் என்று அதர்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படத்தின் இயக்குநர் எம் ராஜேஷும் இந்தப் படம் குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் எப்போதும் என்டர்டெயின்மெண்ட் படங்களை கொண்டாடுவார்கள் என்று தெரிவித்துள்ள எம் ராஜேஷ், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் இத்தகைய ஜானர்களில் தான் படங்களை இயக்குவது தனக்கு பெருமையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் கதைக்களம் ரசிக்கத்தக்க வகையில் பொழுதுப்போக்கு படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *