சல்மானுடன் இணையும் அட்லீ.. ஆண்டவருடன் நடந்த பேச்சு வார்த்தை?

சல்மானுடன் இணையும் அட்லீ..  ஆண்டவருடன் நடந்த பேச்சு வார்த்தை?
  • PublishedSeptember 21, 2024

ஐந்து வெற்றி திரைப்படங்களை இயக்கி மெகா ஹிட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ குமார், தற்பொழுது தனது ஆறாவது திரைப்பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார். மேலும் இந்த திரைப்படமும் ஒரு ஹிந்தி திரைப்படமாக அமைய உள்ளது.

பாலிவுட் உலகின் மிக மூத்த நடிகரான சல்மான் கானை வைத்து, தனது ஆறாவது திரைப்படத்தை அட்லீ இயக்க உள்ளார் என்கின்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வந்தது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கான பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்பொழுது கடந்த சில நாட்களாக ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதில் சல்மான் கானுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில், அட்லீயின் ஆறாவது திரைப்படத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிக்க உள்ளதாகவும். அதற்கான பேச்சுவார்த்தை அவரோடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *