இந்தியாவின் முதல் ஏலியன் படம் “அயலான்”… எப்படி இருக்கு?

இந்தியாவின் முதல் ஏலியன் படம் “அயலான்”… எப்படி இருக்கு?
  • PublishedJanuary 12, 2024

சிவகார்த்திகேயனை வைத்து ரவிக்குமார் இயக்கியிருக்கும் அயலான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் வந்தார்.

பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் அயலான் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

அயலானுக்கு போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. தனுஷ்தான் சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இன்று இரண்டு பேரின் படங்களும் ரிலீஸாகியிருக்கின்றன. எனவே இந்த ரேஸில் தனுஷ் வெல்வாரா இல்லை சிவகார்த்திகேயன் வெல்வாரா என்ற கேள்விதான் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அயலான் படத்தை பொறுத்தவரை இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. நம்பி சென்றதற்கு ஒரு ஜாலியான படம் பார்த்த வந்ததாக இதுவரை படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *