பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் சாதனை படைக்கு ”பாகுபலி தி எபிக்“

பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் சாதனை படைக்கு ”பாகுபலி தி எபிக்“
  • PublishedNovember 3, 2025

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் இந்தியாவைத் தாண்டி உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் என பலரும் நடித்திருந்தனர்.

2015ஆம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்த நிலையில், 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளிவந்தது.

பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்கிற படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

கடந்த வாரம் திரைக்கு வந்த பாகுபலி தி எபிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 45+ கோடி வசூல் செய்துள்ளது.

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பி வரும் பாகுபலி தி எபிக், இனி வரும் நாட்களிலும் தனது வசூல் வேட்டையை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *