‘வணங்கான்’ – வெற்றி கொடுத்தாரா பாலா? முதல் நாள் வசூல் விவரம்

‘வணங்கான்’ – வெற்றி கொடுத்தாரா பாலா? முதல் நாள் வசூல் விவரம்
  • PublishedJanuary 11, 2025

இயக்குனர் பாலா, கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய வெற்றிப் படத்தை கொடுக்க தொடர்ந்து போராடி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பரதேசி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பல பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற நிலையில், வசூல் ரீதியாக பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை.

அதேபோல் இந்த படத்தை தொடர்ந்து, இவர் இயக்கிய ‘தாரை தப்பட்டை’, ‘நாச்சியார்’ ,’வர்மா’… போன்ற படங்களும் பாலாவுக்கு தோல்வியை கொடுத்தது.

‘வர்மா’ திரைப்படம் வெளியாகி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், நடிகர் சூர்யாவை வைத்து பாலா பூஜை போட்ட படம் தான் ‘வணங்கான்’. ஒரு மாதம் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில், பாதியிலேயே நின்றது. இதைத் தொடர்ந்து சூர்யா, இந்த படத்தில் இருந்து விலகினாலும் வேறொரு நடிகரை வைத்து இந்த படத்தை இயக்குவேன் என பாலா தெரிவித்தார். அதன்படி அருண் விஜய்யை வைத்து, மீண்டும் வணங்கான் படத்தை இயக்குவதை உறுதி செய்தார்.

இந்த படத்தின் மூலம், அண்ணன் – தங்கை சென்டிமென்டை பாலா அழுத்தமாக கூறியிருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இயக்குனர் இந்த படத்தின் ஒன் லைன் குறித்து கூறியபோது, “ஒரு ரகசியம் வெளியே தெரிய வந்தால்10 பேருக்கு பிரச்சனை ஏற்படும். அந்த ரகசியம் மறைக்கப்பட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஹீரோ எடுக்கும் முடிவே இந்த படம் கதை என்பது போல் தெரிவித்திருந்தார்.

அருண் விஜயும் இதற்க்கு முன் நடித்த படங்களை விட, ‘வணங்கான்’ படத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘வணங்கான்’ திரைப்படம் ஒரு சில ரசிகர்கள் மத்தியில் பாலாவின் டச் மிஸ் ஆகிவிட்டதாக கூறி… கலவையான விமர்சனங்களை பெற்றாலும், செண்டிமெண்ட் விரும்பிகள் இந்த படத்தை தாறு மாறாக புகழ்ந்து தள்ளினர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான ‘வணங்கான்’ அருண் விஜய் மற்றும் பாலாவுக்கு வெற்றி கொடுத்ததாகவே பார்க்கப்படும் நிலையில், இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 1.50 கோடி வசூல் வசூல் செய்துள்ளது. நேற்றைய தினம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களும் வெளியான போதிலும், தமிழகத்தில் கோடிகளில் பாலாவின் வணங்கான் கல்லா கட்டி உள்ளது, இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *