ஏண்டா நடிச்சோம் என ஃபீல் பண்ணிய பானுப்ரியா

ஏண்டா நடிச்சோம் என ஃபீல் பண்ணிய பானுப்ரியா
  • PublishedMarch 31, 2025

திறமை, அழகு, நடிப்பு, நடனம் என அனைத்திலும் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா.

ஆராரோ ஆரிரரோ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்போது பானுப்ரியா படங்கள் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார், நல்ல கதையுள்ள படங்கள் வந்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை பானுப்ரியா ஏண்டா நடிச்சோம் என ஃபீல் பண்ணிய படம் குறித்து கூறியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வந்த நாட்டியம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தான் வருந்துகிறேன்.

இதில் அம்மா கதாபாத்திரத்தில் பானுப்ரியா நடித்திருந்தார், ஆனால் படத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. கதை சொல்லும் போது கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என சொன்னதாகவும் நிறைய பில்டப் செய்துவிட்டு கடைசியில் தனது கதாபாத்திரம் ஒன்றுமே இல்லை என கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *