வேட்டையன் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்..
டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 350 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஜெய்பீம் என்ற சமூக கருத்துள்ள படத்தை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் இயக்குநர் டிஜே ஞானவேல். இதனிடையே, அதே போன்றதொரு கதைக்களத்தை அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் ஜெய் பீம் படம் உருவானவிதம் வேறு மற்றும் வேட்டையன் படத்தின் கதைக்களம் வேறு என்று தற்போது பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வேட்டையன் படத்தை ஜெய் பீம் படத்தை வைத்து விமர்சிப்பது தவறு, தப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரஜினிக்காக டிஜே ஞானவேல் வேட்டையன் படத்தில் பல சமரசங்களை செய்துள்ளதாகவும் இந்தப் படத்தை ரஜினி ரசிகர்களை கருத்தில் கொண்டு பல கமர்ஷியல் அம்சங்களை அவர் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் என்கவுண்டருக்கான காரணம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த காட்சிகள் சேர்க்கப்பட்டதாக டிஜே ஞானவேல் கூறியுள்ளார்.
கல்வியும் மருத்துவமும் வியாபாரமயமானதையும் இந்தப் படத்தில் கதைக்களமாக ஞானவேல் எடுத்துக் கொண்டுள்ளதையும் பயில்வான் ரங்கநாதன் சுட்டிக் காட்டியுள்ளார். கமர்ஷியல் படத்திலும் நல்ல விஷயங்களை மக்கள் பெற வேண்டும் என்பதற்காக ஞானவேல் மெனக்கெட்டுள்ளதையும் பயில்வான குறிப்பிட்டுள்ளார்.
வேட்டையன் படம் ரஜினி படமாகவும் அதே நேரத்தில் டிஜே ஞானவேல் படமாகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் பயில்வான் தெவித்துள்ளார்.