பாக்கியலட்சுமி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி!! முக்கிய பிரபலம் விலகல்…

பாக்கியலட்சுமி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி!! முக்கிய பிரபலம் விலகல்…
  • PublishedMay 21, 2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த சீரியல் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து விறுவிறுப்பான திரைக்கதை உடன் நகர்ந்து வரும் இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

 

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகனாக எழில் கேரக்டரில் விஜே விஷால் நடித்து வருகின்றார்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி தொடரில் இருந்து தற்போது நடிகர் விஜே விஷால் விலகி இருக்கிறாராம். சீரியலில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரியளவில் ஸ்கோப் இல்லாததால் அந்த தொடரில் இருந்து அவர் விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இவருக்கு ஜோடியாக அம்ரிதா கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகாவும் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

அவரைத் தொடர்ந்து தற்போது விஜே விஷாலும் விலகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விஷால் விலகியது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு பதிலாக எழில் கதாபாத்திரத்தில் `ஈரமான ரோஜாவே 2’வில் நடித்திருந்த நவீன் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *