‘அவளா நீ..” பிக்பாஸ் அர்ச்சனா யார் தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்

‘அவளா நீ..” பிக்பாஸ் அர்ச்சனா யார் தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்
  • PublishedJanuary 7, 2024

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ளவதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளன. இதில் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், அவர் டைட்டிலை பெற வாய்ப்பு இருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

மேலும், அர்ச்சனா குறித்து பலருக்கு தெரியாத தகவலையும் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அர்ச்சனா யாருனா இரண்டு ஆண்டுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் அர்ச்சனாவின் தலையில் கை வைத்து வைரமுத்து ஆசீர்வதித்து இருப்பார்.

இந்த போட்டோவை பார்த்த சின்மயி, ஆரம்பத்தில் இதுபோலத்தான் அனைத்தும் இருக்கும். தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள். அவரை சந்திக்கும்போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

சின்மயி போட்ட கமெண்டை டெலிட் செய்த அர்ச்சனா, நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என்னுடைய தந்தை ஒரு தமிழ் பேராசிரியர். எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அனைவருமே வைரமுத்து சாரருடைய பாடலை தான் கேட்டிருப்பார்கள்.

எனக்கு சின்மயியை தனிப்பட்ட முறையில் யார் என்று தெரியாது. ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அனைவரும் பேச தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது. இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட். இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும் கூறி சின்மயிக்கு சரியான பதிலடி கொடுத்து இருந்ததாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *