இயக்குனராகிய பேத்தி மதிவதினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதிராஜா

இயக்குனராகிய பேத்தி மதிவதினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதிராஜா
  • PublishedFebruary 27, 2024

தமிழ் திரையுலகில் கிராமத்து படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் என்றால் அது பாரதிராஜா தான். எண்ணற்ற மண்வாசம் மிக்க படங்களை கொடுத்துள்ள இவர் தான் இன்றைய முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.

இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். ஆரம்பத்தில் நடிகராக ஒரு சில படங்களில் தலை காட்டி வந்த மனோஜ், பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் ரிலீஸ் ஆனது. மனோஜ் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படி குடும்பத்தில் அடுத்தடுத்த இயக்குனர்கள் உருவாகி வரும் நிலையில், தற்போது புது வரவாக பாரதிராஜாவின் பேத்தியும், மனோஜின் மகளுமான மதிவதினி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

தான் பயிலும் பள்ளிக்காக குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். அந்த குறும்படத்தில் பாரதிராஜா தான் நடித்துள்ளார். இளம் வயதிலேயே அசத்தும் பேத்தியின் அசாத்திய திறமையை பார்த்து வியந்துபோன பாரதிராஜா, அவரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, பொன்னாடை போர்த்தி சிறப்பாக டைரக்‌ஷன் செய்ததாக வாழ்த்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *