போதை கடத்தல் வியாபாரியுடன் தொடர்பு? கணவரை பிரிகிறாரா நமீதா? பயில்வான் ஷாக்

போதை கடத்தல் வியாபாரியுடன் தொடர்பு? கணவரை பிரிகிறாரா நமீதா? பயில்வான் ஷாக்
  • PublishedJanuary 19, 2024

v

நடிகை நமீதா காதல் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை நமீதா 2017ம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2022ம் ஆண்டு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில், நடிகை நமீதா குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில், ஏழு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை நமீதா விவாகரத்து செய்ய உள்ளதாக வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.

“போதை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒரு கோடீஸ்வர தொழிலதிபருடன் உறவில் இருப்பதாகவும், அவரின் அந்த ராஜபோக வாழ்க்கைக்கு மயங்கிவிட்டதாகவும், இதனால், தனது காதல் கணவரை அவர் பிரிய முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், இதுகுறித்து நமீதா தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை, ஒரு வேலை இது போன்று ஒரு செய்தி இணையத்தில் பரவி வருவது, நமீதாவிற்கு தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோவிற்கு பிறகாவது, இந்த செய்தியை பார்த்த பிறகாவது இதற்கு நமீதா பதில் அளிக்க வேண்டும்.

ஏன் என்றால், வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு, அரசியலிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். நடிகை நமீதா தனது பாதுகாப்புக்காகவே பாஜகவில் இணைந்தார்.

ஆனால், கட்சியில் என்ன செய்கிறார், என்ன பொறுப்பு என்றெல்லாம் நமக்கு தெரியாது என்று பயில்வான் அந்த பேட்டியில் நமீதா குறித்து குண்டை தூக்கி போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நல்ல இருக்கும் குடும்பத்தை பற்றி இப்படி சொல்வது சரியா என்றும், இதெல்லாம் ஒரு பொழப்பா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *