ஆவிகள் பிசாசுகள் பற்றி மிக தீவிரமாக ஆராயும் படத்தில் பூமிகா…

ஆவிகள் பிசாசுகள் பற்றி மிக தீவிரமாக ஆராயும் படத்தில் பூமிகா…
  • PublishedJanuary 26, 2024

‘பத்ரி’ படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ரோஜாகூட்டம், சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பூமிகா சாவ்லா. பின்னர் தெலுங்கு சினிமாவில் பிசியாவிட்டார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் இவர் நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ படம் பல வருடங்களுக்கு பிறகு வெளியானது. கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த ‘கண்ணை நம்பாதே’ படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.

இந்த நிலையில் தற்போது ‘ஸ்கூல்’ என்ற படத்தில் பள்ளி ஆசிரியையாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் வித்யாதரன் கூறும்போது “இது முழுக்க முழுக்க ஸ்கூலில் நடக்கும் கதை. ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.

அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்லவிருக்கிறோம்.

மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும், மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் கிரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே.எஸ் ரவிகுமாரும் நடிக்கிறார்கள்” என்றார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *