ஜோவிகாவை காப்பாற்ற தீயாக வேலை செய்யும் வணிதா… இதுதான் மேட்டரா??

ஜோவிகாவை காப்பாற்ற தீயாக வேலை செய்யும் வணிதா… இதுதான் மேட்டரா??
  • PublishedNovember 22, 2023

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே இந்த ஏழாவது சீசன் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம், மாயா, பூர்ணிமா அலப்பறை என சுவாரசியமாக மாறி இருக்கிறது. அதில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது.

அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக வெளியில் பெரிய கூட்டமே இருக்கிறதாம். அந்த பி ஆர் டீம் தான் ஓட்டு போடுவதிலிருந்து பாசிட்டிவ் மீம்ஸ் என ஒவ்வொன்றையும் பார்த்துக் கொள்கிறார்களாம். கடந்த சீசனில் பலரும் வெறுத்த அசீம் டைட்டிலை அடித்ததற்கு கூட இவர்கள்தான் காரணம்.

அதேபோன்று இந்த சீசன் போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும் ஒரு குழு செயல்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்தது.

அது தற்போது உறுதியாகும் வகையில் ஒவ்வொரு விஷயமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாயா, பூர்ணிமா இருவரும் கோட் வேர்ட் பற்றி பேசியுள்ளனர்.

அதில் பூர்ணிமா தனக்கு வந்த மஞ்சள் நிற டீ ஷர்ட் பற்றி பேசுகிறார். உடனே மாயா அவர்கள் அதை அனுப்பிய வாரத்தில் நீங்கள் சரியாக விளையாடாமல் இருந்திருப்பீர்கள் என சொல்கிறார். இதில் இருந்தே கலர் மூலம் அவர்கள் வெளியில் என்ன நடக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருக்கின்றனர் என தெரிகிறது.

இதில் வனிதா தன் மகளுக்கு அனுப்பிய டி-ஷர்டில் அடங்கிய வாசகமும் விவாதமாகி இருக்கிறது. அதாவது சிங்கம் சிங்கிளாகத் தான் இருக்கும் என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்டை அவர் ஜோவிகாவுக்கு அனுப்பி இருந்தார்.

இதன் மூலம் அவர் மாயா, பூர்ணிமாவோடு சேராமல் தனியாக விளையாடு என குறிப்பு கொடுத்திருக்கிறார். இப்படியாக வத்திக்குச்சி வனிதா தன் மகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *