நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்?

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்?
  • PublishedOctober 3, 2025

தமிழ் சினிமாவில் 42 வயதாகியும் டாப்பில் இருப்பவர் தான் நடிகை த்ரிஷா.

இவர் நடிப்பின் மூலமும் அழகிலும் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் சரியான பட அமையாமல் ஹிட் கொடுக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் ஹிட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார். கடைசியாக த்ரிஷா நடிப்பில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேனாம் பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறித்து. அவரது வீட்டை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து அனைவரது வீட்டிலும் மோப்பநாய் உதவியுடன் நடந்த சோதனையில் வெடி குண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *