Captain Miller… நான்காம் நாள் கலெக்ஷன்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Captain Miller… நான்காம் நாள் கலெக்ஷன்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
  • PublishedJanuary 16, 2024

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர்.

நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

இரண்டு நாளில் 7 முதல் 9 கோடியும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 7 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, பொங்கல் பண்டிகை தினமான நேற்று 6.50 கோடி ரூபாய் வசூலித்து பெருத்த சரிவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் படி நான்கு நாட்கள் மொத்த வசூல் 30.45 கோடி ரூபாயாக உள்ளது.

நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் படம் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்த்த நிலையில் படத்தின் வசூல் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால், தனுஷின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *