மேடையில் வைத்து இசைபுயலை அசிங்கப்படுத்திய பிரபலங்கள்!
சினிமாவில் ஒரு படம் வெற்றியடைய வேண்டும் என்றால் அந்த படத்தின் கதை மட்டுமல்ல, பாடல், பின்னணி இசையும் கைக்கொடுக்க வேண்டும்.
அவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மானுடைய இசையமைப்பில் வந்த பாடல்கள் அனைத்துமே படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இந்த வெற்றி இந்திய அளவில் நல்ல பெயரை வாங்கித் தந்தது மட்டுமல்லாமல் ஆஸ்கார் விருதையும் பெற்று தந்தது.
இந்நிலையில், இசை புயல் ஏஆர் ரகுமானை மூன்று பிரபலங்கள் பொது மேடையில் அசிங்கப்படுத்திய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அவர்களுக்கு அதே இடத்திலேயே ஏஆர் ரகுமான் பதிலடியும் கொடுத்திருக்கிறார். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சல்மான் கான்: ஒரு முறை சல்மான் கானும் ஏஆர் ரகுமானும் ஒரே மேடையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது சல்மான் கான் ஏஆர் ரகுமானை பார்த்து ‘முன்பு போல் ஏஆர் ரகுமான் இசையமைப்பதில்லை’ என்று சிரித்துக் கொண்டே நக்கலாக கூறினார். அப்போது அவரை சல்மான் கான் கையைக் கொடுத்து சமாதானப்படுத்த நினைத்தாலும் அந்த நிமிடம் கையை உதறி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பார்த்திபன்: நடிகர் பார்த்திபனும் ஏஆர் ரகுமானும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பார்த்திபன் மைக் வேலை செய்யவில்லை என்று கோபத்தில் மைக்கை தூக்கி வீச உடனே மேடையில் அமர்ந்திருந்த ஏஆர் ரகுமான் கொஞ்ச நேரம் அப்செட் ஆனார். ஆனால் பார்த்திபன் சிறிது நேரத்தில் கோபம் தணிந்ததும் அங்கிருப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ராதாரவி: ஒருமுறை ஏஆர் ரகுமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரைப் பற்றி பேசும் போது ‘இன்னைக்கு ஏஆர் ரகுமான் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் இவன் இளையராஜாவிற்கு கீழ் வேலை பார்த்தவன்’ என ஒருமையில் பேசியதால் ரகுமான் டென்ஷன் ஆனார்.