இன்று வெளியாகிறது சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட்!

இன்று வெளியாகிறது சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட்!
  • PublishedJune 29, 2023

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.

லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்து கலக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சந்திரமுகி 2 படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அனேகமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *