சந்திரமுகி 2 ரிலீஸ் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

சந்திரமுகி 2 ரிலீஸ் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு
  • PublishedSeptember 8, 2023

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

18 வருடங்கள் கழித்து உருவாகியுள்ள சந்திரமுகி 2 லைகா புரடக்ஷன் தயாரிப்பில், ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை – தோட்டா தரணி. மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்திரமுகி 2 செப்டம்பர் 15 வெளியாவதாக இருந்தது. ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருந்தனர். ஆனால், ரிலிஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *