இளம் ஆதித்த கரிகாலனுக்கு என்னவொரு சந்தோஷம்! சியான் விக்ரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

இளம் ஆதித்த கரிகாலனுக்கு என்னவொரு சந்தோஷம்! சியான் விக்ரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி
  • PublishedMay 11, 2023

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இளம் ஆதித்த கரிகாலனாக நடித்த நெஜமாவே சந்தோஷுக்கு சியான் விக்ரம் அன்பு பரிசை வழங்கி உள்ளார்.

விஜய், அஜித், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களே இன்னமும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்காத நிலையில், இளம் நடிகரான நெஜமாவே சந்தோஷுக்கு முதல் படத்திலேயே மோதிரக் கையால் குட்டுப் பட வேண்டும் என எழுதி வைத்திருக்கிறது என சினிமா வட்டாரத்திலேயே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம் மிரட்டலான நடிப்பை ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுத்திய நிலையில், இளம் வயது ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆரம்ப காட்சிகளில் நடித்து அசத்தியவர் நடிகர் நெஜமாவே சந்தோஷ்.

இந்த நிலையில், அவருக்கு நடிகர் சியான் விக்ரமிடம் இருந்து அன்பு பரிசு ஒன்று வந்துள்ளது.

சியான் விக்ரமின் யங் வெர்ஷனாக இளம் ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நெஜமாவே சந்தோஷுக்கு நடிகர் விக்ரம் ஒரு பூங்கொத்தையும் சில உணவுப் பொருட்களையும் பரிசாக வழங்கி உள்ளார்.

அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம சந்தோஷத்துடன் ஷேர் செய்து தேங்க்யூ சார் என சியான் விக்ரமுக்கு நன்றி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *