பிரபல நடிகை திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்

பிரபல நடிகை திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்
  • PublishedSeptember 18, 2024

சிஐடி சகுந்தலா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சகுந்தலா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.

ஜெய்சங்கர் நடித்த சிஐடி சங்கர் படத்தில் நடித்து மிரட்டிய சகுந்தலாவை ரசிகர்கள் சிஐடி சகுந்தலா என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

சினிமாவில் இருந்து விலகி சீரியல்களில் நடித்து வந்த சகுந்தலா கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதை விட்டு விட்டு பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், திடீரென நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டது. பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலாவுக்கு 84 வயது.

சகுந்தலாவின் மறைவு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களை கலங்க வைத்துள்ளது. சீனியர் நடிகைக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய ரசிகர்களும் சிஐடி சகுந்தலாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *