சிம்புவிற்கு போட்டியாக களமிறங்கும் காமடி நடிகர்!

சிம்புவிற்கு போட்டியாக களமிறங்கும் காமடி நடிகர்!
  • PublishedMarch 20, 2023

சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்திற்கு போட்டியாக இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன.

மாநாடு,  வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பத்துதல. இந்த பபம் வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இப்போது பத்து தல படத்துக்கு போட்டியாக இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வரும் விடுதலை படமும் பத்து தல படத்துடன் வெளியாகிறது.

காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்போது சிம்புவுக்கு போட்டியாக சூரியை இறக்கி விட்டுள்ளார் வெற்றிமாறன்.

அதேநேரம்  நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படமும் வெளியாகிறது. ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இவ்வாறாகை பத்துதல திரைப்படத்துடன் விடுதலை மற்றும் தசரா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *