தளபதி 68 : ஒருவேளை கொரியன் ரீமேக்கா இருக்குமோ?

தளபதி 68 : ஒருவேளை கொரியன் ரீமேக்கா இருக்குமோ?
  • PublishedMay 19, 2023

கடந்த பல மாதங்களாகவே லியோ திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதையே ஓரம் கட்டும் அளவுக்கு தளபதி 68 தகவல்கள் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.

தளபதி 68 வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். தற்போது இந்த படம் குறித்த அப்டேட்டை அவர் கூறியிருக்கிறார்.  அதாவது தளபதி 68 வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்குமாம்.

ஏற்கனவே ஒருமுறை வெங்கட் பிரபு,  விஜய்யுடன் இணையும் பட்சத்தில் படத்தின் கதை இப்படித் தான் இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

எப்படி என்றால் ஏலியன் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக தான் இப்படம் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அதாவது ஏலியன் விஜய்யை கடத்திச் சென்று தங்கள் கிரகத்திற்குள் வைத்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் ஆடியன்ஸை உற்சாகமடைய வைக்கும் என அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *