ரஜினியின் வேட்டையன் ட்ரெயிலருக்கு தேதி குறிச்சாச்சு.. எப்படி தெரியுமா?

ரஜினியின் வேட்டையன் ட்ரெயிலருக்கு தேதி குறிச்சாச்சு..  எப்படி தெரியுமா?
  • PublishedSeptember 30, 2024

டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் வெயிட்டிங்கில் இருக்கும் நிலையில் தற்போது ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

https://x.com/MovieTamil4/status/1840701644394151936

அதன்படி, வரும் அக்டோபர் 2ம் தேதி படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாவது சரியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இந்த மொழிகளில் அக்டோபர் 2ம் தேதி ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *