பாபா படத்துடன் திருந்திய ரஜினி… பட்டும் திருந்தாத விஜய்… என்ன நடக்குமோ??

பாபா படத்துடன் திருந்திய ரஜினி… பட்டும் திருந்தாத விஜய்… என்ன நடக்குமோ??
  • PublishedJune 20, 2023

ரஜினியின் பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு மிகவும் ஆரவாரத்துடன் வெளியானது. இத்திரைப்படம் நிறைய விவாதங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது. குறிப்பாக ரஜினி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் வெளியாகின.

ரஜினி படங்களை ரஜினி ரசிகர்கள் மற்றும் இன்றி குழந்தைகள் இளைஞர்கள் என அனைவரும் பார்க்கும் படமாக அமையும் தருவாயில், அவர் சிகரெட் குடித்து இளைய தலைமுறைகளை கெடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அதன் பிறகு ரஜினி அடுத்தடுத்து வந்த படங்களில் அதை நிறுத்திவிட்டு ஸ்டைலுக்காக சுயிங் கம் போட்டு தன்னுடைய ஓப்பனிங் பாடல் காட்சியில் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்தார். இப்போது இதே போல் லியோ படத்தில் விஜய் சிகரெட் குடிக்கும் படியான ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி நான் ரெடி என்கிற சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாக உள்ளது. இது குறித்த போஸ்டரில் விஜய் வாயில் சிகரெட் வைத்து கொண்டிருப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின் அந்த போஸ்டரை டெலிட் செய்து விட்டார்கள். தற்போது மீண்டும் இதே போல் செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த சூப்பர் ஸ்டாரிடம் மற்றும் கட்சி ஆரம்பித்தல் மக்கள் சேவை செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ள விஜய், இந்த விஷயத்தில் கோட்டை விட்டுட்டார்.

புது புது சர்ச்சைகளால் இந்த படத்திற்கு கூடுதல் பிரமோஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் மற்றும் விஜய் தரப்பு இப்படி செய்கிறார்களா என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மாணவர்களிடம் பாசாங்கமாக பேசி ஓட்டு கேட்பது என்றும் மறுபக்கம் புகைப்பது போன்று போஸ்டர்களை வெளியிட்டு நாடகம் ஆடுவது போன்று உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *