பிக்பாஸ் விஷ்ணு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வரை… லீக்கானது புது லிஸ்ட்

பிக்பாஸ் விஷ்ணு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வரை… லீக்கானது புது லிஸ்ட்
  • PublishedJanuary 23, 2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பியில் சக்கைப்போடு போடுவது குக் வித் கோமாளி தான்.

கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி, மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல் அல்லாமல் காமெடி கலந்த ஷோவாக இருப்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், நான்காவது சீசனில் மைம் கோபியும் டைட்டில் வின்னர்கள் ஆகினர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படும். ஆனால் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த ஆண்டு கிடையாது என்றெல்லாம் பேச்சுகள் எழத் தொடங்கின.

ஆனால் அதெல்லாம் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான ஆள் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறதாம்.

அதன்படி நடிகை வடிவுக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பிக்பாஸ் சீசன் 7 பைனலிஸ்ட்டான விஷ்ணு விஜய், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்‌ஷதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா, ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெங்கடேஷ் பட் மற்றும் தாமு வழக்கம்போல் நடுவர்களாகவும், மணிமேகலை மற்றும் ரக்‌ஷன் ஆகியோர் தொகுப்பாளர்களாகவும் செயல்படுவார்கள் என்றும், விரைவில் இந்நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *