கூலி பட சூட்டிங் ஆரம்பிக்கப்போகுது… வேட்டையன் ரிலீஸ் அப்டேட் இதோ

கூலி பட சூட்டிங் ஆரம்பிக்கப்போகுது… வேட்டையன் ரிலீஸ் அப்டேட் இதோ
  • PublishedJune 3, 2024

நடிகர் ரஜினிகாந்த் கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளது.

இந்த படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த சூழலில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெயிலர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பும் பல மாதங்களுக்கு முன்னதாக வெளியான சூழலில், படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக தனது பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கூலி படத்தின் சூட்டிங் வரும் 10ம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் அவர் தூள் கிளப்பவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் முன்னதாக கூறிய சூழலில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளதாகவும் முன்னதாக தன்னுடைய பேட்டியில் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *