சன்னி லியோனை துன்புறுத்தாதீர்கள் : நீதிமன்றம் உத்தரவு!

சன்னி லியோனை துன்புறுத்தாதீர்கள்  : நீதிமன்றம் உத்தரவு!
  • PublishedMarch 14, 2023

மம்மூட்டியின் மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மலையாள ரசிகர்கர்களின் மனம் கவர்ந்த சன்னி லியோன் தற்போது ரங்கீலா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

அதாவது சில ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்ததாகவும்,  ஆனால் அவர் பங்கேற்காமல் மோசடி செய்ததாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கினை இரத்து செய்யக்கோரி சன்னிலியோன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், வழக்கு தொடர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது உரிய ஆதாரங்களை முன்வைக்க தவறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்பு வழங்கிய நீதிமன்றம் சரியான ஆதாரங்களை சமர்பிக்காவிட்டால் மனுதாரர் அவரை துன்புறுத்துகிறது என்று பொருள். இதனால் அவர் குற்றம் செய்யவில்லை என முடிவு செய்யும் எனக் கூறி வழக்கை வருகிற 31 ஆம் திகதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *