மீண்டும் ஆர்யா – சந்தானம் காம்போ… மாஸாக வந்த அப்டேட்

மீண்டும் ஆர்யா – சந்தானம் காம்போ… மாஸாக வந்த அப்டேட்
  • PublishedFebruary 24, 2025

நடிகர் சந்தானம் நடித்து வரும் DD Next Level படத்தில் இடம்பெற்ற கோவிந்தா பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் – காமெடி படமாக இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next level) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையொட்டி பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் ஆர்யா பாடல் எழுத முயற்சிப்பது போலவும், அவரிடம் படம் பற்றி சந்தானம் பேசுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் சிங்கிளான கோவிந்தா பாடலை பாடலாசிரியர் கெளுத்தி எழுதியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஆஃப்ரோ இந்தப் பாடலை பாடியுள்ளார். கோவிந்தா பாடல் வரும் புதன்கிழமை வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. படம் மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *