வயிற்றில் குழந்தையுடன் ஹை ஹீல்ஸ்… கல்கி ப்ரீ ரிலீஸில் தீபிகாவின் வீடியோ

வயிற்றில் குழந்தையுடன் ஹை ஹீல்ஸ்… கல்கி ப்ரீ ரிலீஸில் தீபிகாவின் வீடியோ
  • PublishedJune 20, 2024

இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக கல்கி 2898 ஏ.டி திரைப்படம் உருவாகியுள்ளது. படம் இன்னும் ஒரு வாரத்தில் அதாவது ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழு படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கடந்த 10ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்கினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சமீபத்தில் இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். வரும் செப்டம்பர் மாதம் தீபிகாவுக்கு குழந்தை பிறக்கவுள்ளது.

சமீபத்தில் தனது கர்ப்பம் குறித்து பேசிய தீபிகா, பிரசவத்தை நினைத்து நான் மிகவும் பயத்துடனே இருக்கின்றேன். வீட்டில் அம்மா சமைத்ததை சாப்பிட்டுகொண்டு இருக்கின்றேன் எனக் கூறியிருந்தார். ஆனால் நேற்றைய நிகழ்வில் வந்த தீபிகா படுகோனுக்கு அந்த பயம் இருப்பதாக தெரியவில்லை.

காரணம் கேட்டால் அவர் அணிந்து வந்திருந்த ஆடையும், அவர் போட்டு வந்த ஹை ஹீல்ஸ்ஸூம் அனைவரது புருவங்களையும் மேலே தூக்க வைத்தது.

ஒரு சிலரோ ஐயோ மெடம் விழாமல் இருக்கனும் என்று பிரார்த்தித்தனர்.

இ்றும் சிலர். இந்த மாதி நேரத்தில் இது தேவையா? ஒரு பயம், கவனம் இருக்கக்கூடாதா? கர்ப்பமாக இருக்கும் பெண் தனது குழந்தை மீது அக்கறையுடன் இருக்க வேண்டும் அல்லவா? இவர் ப்படி அக்கறை இல்லாமல் இருக்கின்றாரே என விமர்சித்து வருகின்றனர்..

இது தொடர்பான காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *