திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் தன்ஷிகா

திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் தன்ஷிகா
  • PublishedJune 4, 2025

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரின் திருமணம் எப்போது என்பதே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கேள்வியாக இருந்த வந்தது.

அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில், நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

இவர்கள் திருமணம் ஆகஸ்ட் 29 – ம் தேதி விஷால் பிறந்தநாள் அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவருடைய திருமணம் குறித்து தன்ஷிகா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் என் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்காக 16 வருடமாக உழைத்து இருக்கிறேன்.

சினிமா என்பது என்னுடைய பேஷன், இதனால், படத்தில் தொடர்ந்து நடிப்பேன், இதைத்தாண்டி வேறு எதையும் நான் யோசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *