விவாகரத்துக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்த… தனுஷ் – ஐஸ்வர்யா

விவாகரத்துக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்த… தனுஷ் – ஐஸ்வர்யா
  • PublishedJune 1, 2025

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்களது விவாகரத்தை இருவரும் அறிவித்தனர். விவாகரத்துக்கு பின் ஒரே ஒரு முறை தங்களது மகனின் பள்ளியில் சந்தித்து கொண்ட புகைப்படம் வெளிவந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்களது மகனுக்காக இருவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். ஆம், தனுஷ் – ஐஸ்வர்யாவின் மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். அவர்கள் ஒன்றாக மகன் யாத்ராவை கட்டியணைக்கும் போட்டோக்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *