ஊரே கொண்டாடிய அமரன் படத்தை கண்டுகொள்ளாத தனுஷ்… காரணம் என்ன?
தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதை போல் திரைப்பிரபலங்களும் அப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, சீமான், நடிகர் சிம்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன் போன்றோரும் பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ், அமரன் படத்தை பார்க்கும் முன்னரே அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.
அது வேறெதுவுமில்லை, துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் படத்தை தான் தனுஷ் பாராட்டி இருக்கிறார். படத்தை பார்த்ததும் அப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு போன் பண்ணியுள்ள தனுஷ், வேற லெவல் படம் என பாராட்டி தள்ளி இருக்கிறார்.
இந்த தகவலை இயக்குனர் வெங்கி அட்லூரி சமீபத்திய நேர்காணலில் கூறி இருக்கிறார். நடிகர் தனுஷ் லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டி பதிவிட்டதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறாது. லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் வாத்தி என்கிற படத்தில் நடித்திருந்தார்.
அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் போது வெங்கி அட்லூரி உடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரது படத்தை பாராட்டி இருக்கிறார். மறுபுறம் தனுஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளது அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான். அப்படி இருக்கையில் அவரின் அமரன் படத்தை பார்த்து தனுஷ் பாராட்டாமல் இருப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.