D50 க்கு களம் இறங்கி இருக்கும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி.. தனுஷ் மாஸ்டர் பிளேன்

D50 க்கு களம் இறங்கி இருக்கும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி.. தனுஷ் மாஸ்டர் பிளேன்
  • PublishedAugust 15, 2023

தனுஷின் ஐம்பதாவது படத்தின் அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் தான் பயங்கர ட்ரெண்டில் இருக்கிறது. முன்னணி ஹீரோக்கள் கூட தங்களுக்கு இணையாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் வரை வைத்து படம் எடுத்து வருகிறார்கள்.

தற்போது இந்த லிஸ்டில் நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமும் இணைந்திருக்கிறது. இந்தப் படமும் மல்டி ஸ்டார் கான்செப்டில் உருவாக இருக்கிறது.

தனுஷின் ஐம்பதாவது படத்தில் அவருடைய தம்பி கேரக்டரில் நடிக்க இருப்பது நடிகர் காளிதாஸ் ஜெயராம். இவருக்கு ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

இவர் நடித்த பாவ கதைகள் என்னும் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்திலும் இவர் நடித்திருந்தார்.

தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பது தான் தனுஷின் அண்ணன் கேரக்டர் பற்றிய அப்டேட்.

இந்த படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடிக்க இருப்பது எஸ் ஜே சூர்யா. தனுஷ் மற்றும் எஸ் ஜே சூர்யா காம்போவில் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *