மீண்டும் ஹீரோவாகும் தனுஷின் மருமகன்

மீண்டும் ஹீரோவாகும் தனுஷின் மருமகன்
  • PublishedOctober 27, 2025

நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ் தனுஷ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்னர், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ஹீரோ ஆனார்.

இந்த நிலையில், அடுத்த படம் குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது.

பவிஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்துள்ளது. பவிஷ் தாத்தாவும், பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். பவிஷ் மாமாவும், இயக்குனருமான செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த யூடியூப் பிரபலம் நாகதுர்கா ஹீரோயின், புதுமுகம் மகேஷ் ராஜேந்திரன் படத்தை இயக்குகிறார். 2026 கோடை வெளியீடாக இப்படம் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *