வைர மோதிரம்… 5,000 ஊக்கத்தொகை… இப்ப இதுதான் பேசு பொருள்
தளபதி விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா முதல் கட்டமாக இன்று நடந்து வரும் நிலையில், இது குறித்து சில விசே் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழி சினிமாவில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய், கடந்த சில வருடங்களாகவே அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வந்த நிலையில், தற்போது அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டுக்கும் தன்னுடைய பட பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் குறித்து… அப்படியே சட்டசபை தேர்தலையும் சந்திக்க உள்ள தளபதி, அதற்கான ஆயத்த பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அரசியலுக்கு வரும் முன்னரே பல நல்ல காரியங்களை செய்து வரும் விஜய், கடந்த ஆண்டு 234-சட்டமற்ற தொகுதியிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை கைப்பற்றிய மாணவ – மாணவிகளுக்கு ‘கல்வி விருது’ என்கிற பெயரில் பரிசு, சான்றிதழ், ஊக்கத்தொகை கொடுத்து கௌரவித்தது போல் இந்த ஆண்டும் ‘கல்வி விருது விழாவை’ பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.
முதல்கட்டமாக இன்று சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் பெற்றோருடன் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் டாப் 3 இடத்தை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு வைர மோதிரம் பரிசாக கொடுத்தார் விஜய்.
மற்ற மாணவ மாணவிகளுக்கு 5000 ஊக்கத்தொகை, சில பரிசுகள் மற்றும் சான்றிதழ் கொடுத்து கௌரவித்தார்.