விஜய் வீட்டில் விஷேசம்… குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆர்யா

விஜய் வீட்டில் விஷேசம்… குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆர்யா
  • PublishedNovember 25, 2023

இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்ட வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். இந்த விசேஷத்தில் ஆர்யா குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்து பிரபலமானவர், ஏ.எல்.அழகப்பன். இவரின் மூத்த மகனான உதயா பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இதுவரை அவரால் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. மேலும் நடிகர் சங்கத்திலும் சில முக்கிய பொறுப்புகள் வகித்து வந்த உதயா பின்னர் அதில் இருந்து விலகினார்.

ஆனால் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகனும்… இயக்குனருமான ஏ.எல்.விஜய் தமிழ் சினிமா திரையுலகில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர். அஜித்தை வைத்து தன்னுடைய முதல் படமான ‘கிரீடம்’ படத்தை இயக்கிய இவர், அதன் பின்னர் ஆர்யாவை வைத்து மதாராசபட்டினம், விஜய்யை வைத்து தலைவா, பிரபு தேவாவை வைத்து தேவி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி, சாய்ஷா நடித்த வனமகன் போன்ற பல படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஹிட் லிஸ்டில் இணைந்த நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

ஏ.எல்.விஜய் பிரபல நடிகை அமலா பாலின் முன்னாள் கணவர் ஆவார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள் விவாகரத்துக்கு காரணம், மீண்டும் திரைப்படங்களில் அமலாபால் நடிக்க துவங்கியது என கூறப்பட்டது.

அமலா பாலை பிரிந்த, சில வருடத்தில் ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு துருவா என்கிற மூன்று வயது மகன் ஒருவர் உள்ளார். அமலா பால் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குனராக இருக்கும் ஏ.எல்.விஜய் தற்போது புதிய வீடு ஒன்றை காட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் மிகப்பிரமாண்டமாக நடந்துள்ளது.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் ஆர்யா தன்னுடைய மனைவி சாய்ஷா, குழைந்தை, மற்றும் அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் ஏ.எல்.விஜய்க்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *